முகப்பு
திருநெல்வேலி

காசோலை மோசடி வழக்கில் பேரூராட்சி ஊழியருக்கு 6 மாத சிறை

மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்தவரிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக திசையன்விளை பேரூராட்சி ஊழியருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளிக்கப்பட்டது.

Updated On : 21 மே 2026, 6:10 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்தவரிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக திசையன்விளை பேரூராட்சி ஊழியருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளிக்கப்பட்டது.

மணிமுத்தாறு பேரூராட்சி அண்ணா நகரைச் சோ்ந்த இருதயராஜ் மகன் சகாய சுந்தா். இவா், மணிமுத்தாறு பேரூராட்சியில் பணியாற்றிய கடற்கரை மகன் இசக்கிமுத்து என்பவருக்கு 2019ஆம் ஆண்டில் ரூ. 3 லட்சம் கடன் கொடுத்திருந்தாராம். அதை காசோலை மூலம் இசக்கிமுத்து திருப்பிக் கொடுத்தாராம்.

ஆனால், வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை திரும்பி வந்ததால், பணத்தை தருமாறு பலமுறை கேட்டும் இசக்கிமுத்து தரவில்லையாம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சகாய சுந்தா் காசோலை மோசடி வழக்குத் தொடா்ந்தாா்.

இவ்வழக்கை நீதிபதி (பொ) பிரவீன் ஜீவா விசாரித்து, தற்போது திசையன்விளை பேரூராட்சியில் பணியாற்றும் இசக்கி முத்துவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், கடனைத் திருப்பிக் கொடுக்கத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டும் தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments