குலசேகரன்பட்டினம் கோயில் சித்திரை திருவிழா: நாளை கொடியேற்றம்
குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில் சித்திரைப்
குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 20)கொடியேற்றத்துட ன் தொடங்கி ஏப்.29ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த இக்கோயிலில், சித்திரைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு அப்பர் அடிகள் உழவாரப்பணி வீதியுலா, இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் ஸ்ரீபெலிநாதர் வீதியுலா, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் கேடயச் சப்பரத்தில் வீதியுலா ஆகியன நடைபெறுகிறது.
அறம் வளர்த்த நாயகி திருக்கூடத்தில் மாலை 6 மணிக்கு தேவாரப் பண்ணிசை, இரவு 7 மணிக்கு சமயச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா, கேடய, ரிஷப வாகனங்களில் வீதியுலா, அறம் வளர்த்த நாயகி திருக்கூடத்தில் மாலை நேரங்களில் தேவாரப் பண்ணிசை, சமயச் சொற்பொழிவு ஆகியன நடைபெறுகின்றன.
ஏப். 25ஆம் தேதி காலை 7.30 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏப்.26ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடராஜமூர்த்தியை படி இறக்குதல், நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 9 மணிக்கு நடராஜ மூர்த்தி சிவப்பு சாத்தி வீதியுலா, ஏப். 27ஆம் தேதி காலை 5.30 மணிக்கு நடராஜமூர்த்தி வெள்ளை சாத்தி வீதியுலா, 9 மணிக்கு பச்சை சாத்தி வீதியுலா, மாலை 5.15 மணிக்கு கங்காளநாதர் சந்திரசேகரர் வீதியுலா ஆகியன நடைபெறுகிறது.
ஏப். 29ஆம் தேதி காலை 7 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல் வைபவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.