சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணி: இரு அமைச்சர்கள் ஆய்வு
திருச்செந்தூரில், தமிழக அரசு சார்பில் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் கட்டும் பணியை அமைச்ர்கள் கடம்பூர் செ.ராஜூ,
திருச்செந்தூரில், தமிழக அரசு சார்பில் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் கட்டும் பணியை அமைச்ர்கள் கடம்பூர் செ.ராஜூ, உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் இரா.கோவிந்தராசு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கணேசன், வருவாய் ஆய்வாளர் மாரியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., செயலர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, திருச்செந்தூர் ஒன்றிய செயலர் மு.ராமச்சந்திரன், நகர செயலர் வி.எம்.மகேந்திரன், முன்னாள் பேரூராட்சித்தலைவர் மு.சுரேஷ்பாபு, முன்னாள் கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், காந்தி தினசரி சந்தை தலைவர் மு.திருப்பதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர்கள் இருவரும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.