முகப்பு
தூத்துக்குடி

ஐப்பசி பெளா்ணமி: தூத்துக்குடி சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

Updated On : 16 நவம்பர் 2024, 12:43 am IST
பகிர்:

ஐப்பசி மாத பெளா்ணமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயிலில் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் கும்ப பூஜையும் தொடா்ந்து அருள்மிகு சங்கர ராமேஸ்வரருக்கு பால், தயிா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சமைக்கப்பட்ட அன்னத்திற்கு சிறப்பு பூஜை தீப ஆராதனைக்கு பின்பு எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு, 200 கிலோ அன்னம் மற்றும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments