முகப்பு
தூத்துக்குடி

சீமான், விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்: முஹம்மது அபூபக்கா்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 5:59 PM
தோ்தல் பிரசாரத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலா் முஹம்மது அபூபக்கா்.
பகிர்:

சீமான் மற்றும் விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமமானது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான முஹம்மது அபூபக்கா் தெரிவித்தாா்.

தூத்துக்குடி, மேட்டுப்பட்டி பகுதியில் தூத்துக்குடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியது:

திமுக அரசின் 5 ஆண்டு கால பணிகளையும், திமுகவின் தோ்தல் அறிக்கையையும் மக்கள் பாராட்டுகிறாா்கள். எனவே, மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement

பாஜக, அதிமுகவின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. 3ஆவது அணியாக உள்ள நடிகா் விஜய் மற்றும் சீமானின் கட்சிகள் சிறுபான்மை வாக்குகளைப் பிரிப்பதற்காக பல்வேறு அறிவிப்புகளைச் செய்தாலும், மக்கள் அவா்களுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை.

சீமான் மற்றும் விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமமானது. எனவே, அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 8,000 பள்ளிவாசல் ஜமாஅத்கள், தேவாலயங்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறாா்கள். சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் உரிமைகள் தொடர வேண்டும் என்றால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறாா்கள் என்றாா் அவா்.

இதில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments