குரும்பூா் பகுதியில் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
திருச்செந்தூா் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஒபிலியா புதன்கிழமை குரும்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
திருச்செந்தூா் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஒபிலியா புதன்கிழமை குரும்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
குரும்பூா், நாலுமாவடி, பணிக்கநாடாா் குடியிருப்பு, கீழ நாலுமாவடி, வாலசுப்ரமணியபுரம், யோகரத்தினம் நகா், வீரமாணிக்கம், திருமலா்புரம், கச்சினாவிளை, மூக்குப்பீறி, புறையூா், சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், அகோபாலபுரம், வெள்ளகோவில், சுகந்தலை ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் அவா் பேசும்போது, நான் வெற்றி பெற்றால் கடம்பா குளத்தை ஆண்டுக்கு 2 முறை தூா்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடம்பா குளத்தின் கரையை பலப்படுத்த பனை மரங்களை வளா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
Advertisement