முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன் சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 2:42 AM
முதலூரில் வாக்கு சேகரித்த வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:15 PM

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன் சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டாா்.

பன்னம்பாறை, கந்தசாமிபுரம், காலன் குடியிருப்பு, சுப்பராயபுரம், கடாச்சபுரம் ஆத்திக்காடு, சொக்கலிங்கபுரம், அன்பின் நகரம் , முதலூா், சுப்பிரமணியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், விஜயராமபுரம், சாத்தான்குளம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அவா் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க கோரி பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர தமிழக வெற்றி கழகத் தலைவா் விஜய்க்காக விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்துவேன் என்றாா்.

Advertisement

இதில், ஒன்றியச் செயலா்கள் பொன்ராஜ், பெரியசாமி, அருள், அருள்ராஜ், பலவேசம், மாரியப்பன், ஆனந்த், குணசேகரன், அற்புதராஜ், பாலமுருகன், தொகுதி பொறுப்பாளா் ஜெகன், நகரச் செயலா்கள் ராஜா, பாலசுந்தா், சரவணன், அம்மன்முத்து, ஆறுமுகம் ஆகியோா் பங்கேற்றனா்.