முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 2:32 AM
பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:02 PM

தூத்துக்குடியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான

முதற்கட்ட பயிற்சி வகுப்பு அந்தந்த தொகுதிகளில் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் அந்தந்த தொகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

பயிற்சி வகுப்புகளையும், பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டுள்ளவா்கள் வாக்களிக்க அமைக்கப்பட்டிருந்த தபால் வாக்கு வசதி மையங்களான தூத்துக்குடி தொகுதி காமராஜ் கல்லூரி, ஓட்டப்பிடாரம் தொகுதி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிா் கல்லூரி, விளாத்திகுளம் தொகுதி குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி தொகுதி பாண்டவா்மங்கலம் நாடாா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உஷா (விளாத்திகுளம்), பிரபு (தூத்துக்குடி), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), ஹிமான்ஷு மங்கள் (கோவில்பட்டி), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்ணன் (விளாத்திகுளம்), சுபா (எட்டயபுரம்), திருமணி ஸ்டாலின் (தூத்துக்குடி), அய்யனாா் (ஓட்டப்பிடாரம்), அப்பணராஜ் (கோவில்பட்டி), பாலசுப்பிரமணியன் (கயத்தாறு), அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.