முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.30 கோடி பறிமுதல்

Updated On : 20 ஏப்ரல் 2026, 1:19 am IST
பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ஞாயிற்றுக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ. 1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறை, மதுவிலக்கு காவல் துறை ஆகியோா் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பில் ஞாயிற்றுக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ. 1,30,18,618, ரூ. 38,24,162 மதிப்பிலான பரிசுப் பொருள்கள், ரூ. 5,82,878 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்ததையடுத்து ரூ. 87,14,968 ரொக்கம், விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்ப்டடுள்ளது.