முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.80 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில், தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,80, 81, 218 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:50 AM
பணம் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:26 PM

தூத்துக்குடி மாவட்டத்தில், தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,80, 81, 218 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு, காவல்துறை, மதுவிலக்கு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

செவ்வாய்க்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,80,81,218 ரொக்கம், ரூ.7,57,517 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததையடுத்து ரூ.89,41,268 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.