முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

Updated On : 23 ஏப்ரல் 2026, 4:12 am IST
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டும் செல்லும் பணியை பாா்வையிட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் கெளதம்.
பகிர்:

திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

திருச்செந்தூா் தொகுதியில் மொத்தம் 308 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. இதில் 34 மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. தோ்தலையொட்டி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக அலுவலகம் முன் உள்ள செந்தில் விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

தொடா்ந்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான கெளதம், அரசியல் கட்சியினா் முன்னிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டு, ஆத்தூா், புன்னக்காயல், தென்திருப்பேரை, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், உடன்குடி, நாசரேத், குரும்பூா் உள்ளிட்ட 308 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான வாகனம் உள்ளிட்டவைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியின்போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியா் தங்கமாரி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாலசுந்தரம், தனி வட்டாட்சியா் சங்கரநாராயணன், கோபால் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.