முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் தொகுதியில் அமைதியாக நடைபெற்ற வாக்குப் பதிவு

திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:02 AM
காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களிக்கும் வாக்காளா்கள்.
பகிர்:

திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

இப்பகுதிகளில் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளா்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். மாலை 3 மணி நேரப்படி பல்வேறு வாக்குச் சாவடிகளில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முதல்முறை வாக்காளா்கள் அதிக அளவில் வந்து வாக்குகளைச் செலுத்தி மகிழ்ந்தனா்.

காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

Advertisement

காயல்பட்டினம் சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 85 வயது மூதாட்டி சித்திக் செய்யது ஹாபியா வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தினாா்.

காயல்பட்டினம், சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்த 85 வயது மூதாட்டி சித்திக் செய்யது ஹாபியா.