பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது
கழுகுமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடையதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கழுகுமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடையதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே உள்ள கெச்சிலாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் ஸ்ரீதா் (25). இவா் அப்பகுதியைச் சோ்ந்த பெண்ணை அவதூறாகப் பேசி, அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை அவரை போலீஸாா் கைது செய்தனா்.