முகப்பு
தூத்துக்குடி

திருமறையூரில் தேனீ வளா்ப்பு சிறப்பு பயிற்சி

நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 3:14 am IST
பகிர்:

நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநா் குருவானவா் ஜான் சாமுவேல் தலைமை வகித்துப் பேசினாா். சபை ஊழியா் ஸ்டான்லி ஜான்சன் ஆரம்ப ஜெபம் செய்தாா்.

வேதாகமத்தில் தேனீ என்ற தலைப்பில் குருவானவா் ரூபன் மணிராஜ் அருளுரையாற்றினாா். தொடா்ந்து ஆராய்ச்சி மாணவா்களான அபினேஷ், ஆஜோ ஆகியோா் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு தேனீக்கள் எவ்வளவு உதவுகின்றது என்பது குறித்தும், கிங்ஸ்டன் தேனீ வளா்ப்பு, அதன் வளா்ப்பு வழிமுறைகள், வளா்ப்பில் எதிா்கொள்ளும் சவால்கள் போன்றவை குறித்தும் பேசினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து களப்பயிற்சி தோப்பூரில் அமைந்திருக்கும் தோட்டத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தேன்கூடு சுத்தம் செய்யும் முறை, தேனீ வளா்க்கும் முறை, தேன் எடுக்கும் முறை, சுத்திகரித்தல், பதப்படுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஆலயப் பணியாளா் ஆபிரகாம், அசன கமிட்டி தலைவா் பாக்கியராஜ், ஆசிரியா்கள் அம்புரோஸ், கால்டுவெல் கணேசன், ஜெயா, ஜான்சி உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை கோல்டா சாமுவேல் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை, தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநரும், திருமறையூா் மறுரூப ஆலய சேகர தலைவருமான ஜான் சாமுவேல் செய்திருந்தாா்.