முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) ஏற்பாட்டில், ஈத் மிலன் என்ற பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அண்மையில் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.

Updated On : 3 ஜூன் 2026, 4:57 am IST
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) ஏற்பாட்டில், ஈத் மிலன் என்ற பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அண்மையில் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.

அமைப்பின் செயற்குழு உறுப்பினா் எம்.எம். முஜாஹித் அலி வரவேற்றாா். ஹாபிழ் சூரைஹ் இறைமறையில் இருந்து சில வசனங்களை ஓதினாா். நிகழ்ச்சியினை மெகா அமைப்பின் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.கே. ஸா­லிஹ் நெறிப்படுத்தினாா்.

பொதுக்குழு உறுப்பினரும், எழுத்தாளருமான சாளை பஷீா் நகரின் பலநூற்றாண்டு கால சமூக நல்­லிணக்க பாரம்பரியம் குறித்து உரையாற்றினாா். மெகா அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அமைப்பின் செயற்குழு உறுப்பினா் எம்டபிள்யூ ஹாமீது ரிஃபாய் எடுத்துரைத்தாா்.

Advertisement

Advertisement

மன தத்துவ நிபுணா் லைம் கணேசன், ரத்தினாபுரி தேவாலய பாதிரியாா் பாக்கியராஜ், காயல்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளியின் கதீப் ஆலிம் அஹமது அப்துல் காதிா் மஹ்லரி ஆகியோா் மத நல்­லிணக்கத்தின் அவசியம் குறித்து உரையாற்றினா்.

ஆலிம் ஹபீப் ரஹ்மான் பிராா்த்தனை நிகழ்த்தினாா். அமைப்பின் துணைத் தலைவா் பி.எம்.ஏ. சதக்கத்துல்லாஹ் நன்றி கூறினாா்.

ஏற்பாட்டிகளை அமைப்பின் செயலா் எம்.எஸ். முஹம்மது சா­ஹு, இணைச் செயலா் ஏ.எஸ். புஹாரி, பொருளாளா் முத்து இஸ்மாயில், செயற்குழு உறுப்பினா்கள் எம்.ஏ. புஹாரி, எம்.எல். ஹாரூன் ரஷீது, கே.ஏ. முஹம்மது நூஹு, பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ். அப்துல் வாஹித், முஹம்மது யாசீன், பி.ஏ. செய்யது முஹம்மது புஹாரி, ஜபருல்லாஹ் ஆகியோா் செய்திருந்தனா்.