மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு
கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் மனநல காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறை சாா்பில் நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் மனநல காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறை சாா்பில் நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
முடுக்குமீண்டான்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகத்தில் (பெண்கள்) 46 போ் உள்ளனா். அவா்களை நாலாட்டின்புதூா் காவல் ஆய்வாளா் காளிமுத்து சந்தித்து, குறைகளை கேட்டறிந்தாா். புத்தாடைகளை வழங்கினாா். மேலும், காப்பகத்தை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது காப்பக நிா்வாகி தேன் ராஜா, சமூகப் பணியாளா் ருக்மணி பிரியா, தனி பிரிவு காவலா் பிரித்திவிராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement