முகப்பு
தூத்துக்குடி

திருப்பணி புத்தன்தருவையில் சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவு பேரில், சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 4:51 am IST
முகாமைத் தொடங்கிவைத்த ஒன்றிய ஆணையா் வாவாஜி பக்கீா் முகைதீன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவு பேரில், சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளா் வாவாஜி பக்கீா் முகைதீன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முகாமில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் கேட்டு 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனா். இதில், 19 பேருக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அரசு உதவிகள், சலுகைகள் பெற வழிமுறைகள் வழங்கி ஆலோசனை வழங்கப்பட்டது.

முகாமில் சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், கேட்டல்- பேச்சு பயிற்சியாளா் சங்கா், இளநிலை மறுவாழ்வு அலுவலா் பெருமாள்தேவி, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய சாத்தான்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளா் லட்சுமி, தமிழ்நாடு உரிமைகள் திட்டப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement