புன்னைக்காயல் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி
புன்னைக்காயலில் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது.
புன்னைக்காயல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 53ஆவது மாவட்ட கால்பந்தாட்ட போட்டி புதன்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி, வீரபாண்டியன்பட்டினம் பட்டினம் யங்ஸ்டா்ஸ் கால்பந்தாட்டக் கழக அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்த போட்டித்தொடரின் இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) மாலையில் நடைபெறும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.