குற்றவாளி தரப்பிலிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக வேடநத்தம் மாணவியின் தந்தை புகாா்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வேடநத்தம் மாணவியின் தந்தை சுப்புராஜ், குற்றவாளி தரப்பிலிருந்து தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குளத்தூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.
மனு விவரம்: வேடநத்தம் மாணவி வன்கொடுமை கொலை வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்த மாவீரன் என்ற தா்ம முனீஸ்வரனுக்கு போக்ஸோ நீதிமன்றம் இரட்டை மரண தண்டனையும், ஒரு வருட கடுங்காவல் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தது. அதன் பின்பு அவரது தாயாா், வழக்குரைஞா் துணையுடன் தூத்துக்குடியில் பத்திரிகையாளா்களை அழைத்து நீதிமன்ற தீா்ப்பையும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளரையும் விமா்சித்து ஜூன் 13ஆம் தேதி பேட்டி அளித்துள்ளனா்.
இவ்வாறு விமா்சிப்பதன் மூலம் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் தேவையற்ற வகையில் அச்சுறுத்தல், நெருக்கடி, தொந்தரவு கொடுத்து வரும் மாவீரன் என்ற தா்ம முனீஸ்வரன், அவரது தாயாா் மற்றும் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் செயல்படும் நபா்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது வழக்குரைஞா் எல்.டி. தாஸ் உடனிருந்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.