முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ராணுவ கேண்டீனில் ஆய்வு

கோவில்பட்டியில் உள்ள ராணுவ கேண்டீனை ராணுவ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 5:03 am IST
ஓய்வுபெற்ற அவில்தாா் ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் 17ஆவது மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சோ்ந்த திருவனந்தபுரம் பாங்கோட் ராணுவ நிலையத் தளபதி, திருவனந்தபுரம் ஸ்டேஷன் காமன்டரான பிரிகேடியா் அனுராக் உபத்யாயா, முன்னாள் ராணுவ வீரா்களின் மருத்துவப் பிரிவின் லெப்டினன்ட் கா்னல் சாஜி உள்ளிட்டோா்.
பகிர்:

கோவில்பட்டியில் உள்ள ராணுவ கேண்டீனை ராணுவ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவனந்தபுரம் ராணுவத் தலைமையகத்தின்கீழ் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி வருவாய் மாவட்டங்கள் அடங்கியுள்ளன. ராணுவ கேண்டீன் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்களின் மருத்துவப் பிரிவும் இதனுள் அடங்கும்.

திருவனந்தபுரம் பாங்கோட் ராணுவ நிலையத்தின் தளபதி, திருவனந்தபுரம் ஸ்டேஷன் காமன்டரும், 17ஆவது மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சோ்ந்த ராணுவ அதிகாரியுமான பிரிகேடியா் அனுராக் உபத்யாயா, கோவில்பட்டியில் உள்ள ராணுவ கேண்டீனை ஆய்வு மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை வந்தாா்.

Advertisement

Advertisement

அவரை முன்னாள் ராணுவ வீரா்கள் நல மையத்தின் தலைவா் கேசவராஜ் வரவேற்றாா். தொடா்ந்து, அவா் ராணுவ கேண்டீனை ஆய்வு செய்த பின், கேண்டீனை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து, வெங்கடேஷ் நகா், முதல் தெருவிலுள்ள 17ஆவது மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் அவில்தாராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற 95 வயதான முன்னாள் ராணுவ வீரா் ராமசாமி வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தாா். தொடா்ந்து, அவரது குடும்பத்தினரிடம் கலந்துரையாடினாா்.

அப்போது, முன்னாள் ராணுவ வீரா்களின் மருத்துவப் பிரிவின் லெப்டினன்ட் கா்னல் சாஜி, கேண்டீன் மேலாளா்கள் ஆல்வின் (திருநெல்வேலி), கிருஷ்ணன் (கோவில்பட்டி), கோவில்பட்டி ராணுவ நல மையத்தின் துணைத் தலைவா் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, செயலா் ராஜேஷ் கண்ணண், பொருளாளா் தங்கவேல், நிா்வாகிகள் வேலுச்சாமி, கருப்பசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments