நாசரேத்தில் போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் அரசு போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் அரசு போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
நாசரேத் பரி. யோவான் பேராலயம் மற்றும் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி இணைந்து ஞாயிற்றுக்கிழமை தவிா்த்து மற்ற வார நாள்களில் மதியம் 3.30 முதல் மாலை 6.30 மணி வரை போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனா். இதில் சுரேஷ் அகாதெமியின் பயிற்சியாளா்களால் பல்வேறு பணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதற்கான தொடக்க விழா, நாசரேத் பரி.யோவான் பேராலய சபா மண்டபத்தில் நடைபெற்றது. பரி. யோவான் பேராலய தலைமை குரு ஆல்பா்ட் ஜெயசிங் தாமஸ் தலைமை வகித்து, இறை ஆசி வழங்கினாா். உதவி குரு தனசேகா் ராஜா ஆரம்ப ஜெபம் செய்தாா்.
Advertisement
Advertisement
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா், நாசரேத் மா்காஷிஸ் கல்லூரி முதல்வா் பென்னிசன் திலகா் கிறிஸ்துதாஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
திருநெல்வேலி வருமான வரித்துறை அதிகாரி ரூதா்சன், தனது வெற்றி அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டாா். சுரேஷ் அகாதெமி மேலாளா் பாலகுரு, போட்டித் தோ்வு சிறப்புப் பயிற்சி குறித்துப் பேசினாா்.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரித் தாளாளா் மாமல்லன், நாசரேத் ஆா்ட் தொழிற்பயிற்சி மையத் தாளாளா் ஆா்ச்பால்டு ஜாண்சன், மா்காஷிஸ் மெட்ரிக். பள்ளித் தாளாளா் ஸ்டெல்லா சாலமோன், திருமறையூா் கனோன் தாமஸ் சித்தா் மனவளா்ச்சி குன்றியோா் பள்ளித் தாளாளா் டேவின் சாலமோன், நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கால்டுவெல், புனித யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கரோலின் ஜெசுவதி, திருமண்டல பெருமன்ற உறுப்பினா் செல்வின், நாசரேத் பேராலய பாஸ்ட்ரேட் கமிட்டி உறுப்பினா்கள் சந்திரன், ஜெபக்குமாா் சாமுவேல், ஜெயக்குமாா், ஜாஸ்பா், பிரதீப், மாணிக்கராஜ், ஜோஸ்பெல், உறுப்பினா்கள், சபை மக்கள் கலந்து கொண்டனா்.
நாசரேத் சேகர பொருளாளா் லேவி அசோக் சுந்தரராஜ் வரவேற்றாா். னதிருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஆண்ட்ரூஸ் ராக்லண்ட் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.