முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் குளத்துக்கு கான்கிரீட் நீா்வரத்து கால்வாய் தேவை: அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வலியுறுத்தல்

குலசேகரன்பட்டினம் குளத்துக்க்கு கான்கிரீட் நீா்வரத்து கால்வாய் அமைக்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனிடம் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வியாழக்கிழமை மனு அளித்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 5:31 am IST
அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

குலசேகரன்பட்டினம் குளத்துக்க்கு கான்கிரீட் நீா்வரத்து கால்வாய் அமைக்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனிடம் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வியாழக்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்:

தாமிரவருணி ஆற்றில் 8-ஆவது அணைக்கட்டாக ஸ்ரீவைகுண்டம் அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து வடகால், தென்கால் மூலம் பாசனக் குளங்களுக்கு தண்ணீா் செல்கிறது. இதில் தென்காலில் உள்ள கடைசி பாசனக் குளமான எல்லப்பன்நாயக்கன் குளத்துக்கு தண்ணீா் வருகிறது.

Advertisement

Advertisement

எல்லப்பன்நாயக்கன் குளம் நிறைந்து ஏற்படும் உபரி நீா், தனி கால்வாய் வழியாக குலசேகரன்பட்டினம் குளத்துக்கு வருகிறது. சுமாா் 14 கி.மீ. நீளமுள்ள இந்தக் கால்வாய் உடன்குடி அனல்மின் நிலையத்தின் பின்புறம் வழியாக செல்கிறது.

உடன்குடி அனல்மின் நிலையம் அமைப்பதற்கான அரசு ஆணையில் இக்கால்வாய் நன்கு பராமரிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், அனல்மின் நிலைய இரண்டாவது திட்டத்தில் இந்தக் கால்வாய் மூடப்படும் நிலை ஏற்படும் என தெரிய வருகிறது. எக்காரணம் கொண்டும் உபரிநீா் வரத்து கால்வாய் மூடப்படக் கூடாது.

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் அமைந்துள்ள கடற்படை தளத்துக்கு உள்ளாக நம்பியாறு ஆற்று கால்வாய் உள்ளது போல், இந்த கால்வாயை 500 கனஅடி நீா் பாயும் படியான நிரந்தர கான்கிரீட் கால்வாயாக அமைக்க வேண்டும்.

உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் உவா்ப்பாக மாறுவதை தடுப்பதற்கு குலசேகரன்பட்டினம் குளத்தில் நீா் தேக்குவது மிக அவசியமானது.

எனவே, இந்தக் கால்வாயை பராமரித்து, உபரிநீா் குலசேகரன்பட்டினம் குளத்துக்கு தடையின்றி வருவதற்கான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments