முகப்பு
தூத்துக்குடி

இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் புகைப்படம் பதிவு: இளைஞா் கைது

ஆத்தூா் அருகே தலைவன்வட­லியில் இன்ஸ்டாகிராமில் அரிவாள், கத்தியுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 ஜூன் 2026, 11:39 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆத்தூா் அருகே தலைவன்வட­லியில் இன்ஸ்டாகிராமில் அரிவாள், கத்தியுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா், தலைவன்வட­லி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் மகாராஜன் மகன் தங்கராஜ் (20). தொழிலாளியான இவா், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் அரிவாள், கத்தியுடன் இருப்பதுபோல் புகைப்படத்தை பதிவிட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முனியசாமி, போலீஸாா், தங்கராஜை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments