ஏக்கருக்கு ரூ. 4,000 மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஆழ்வாா் திருநகரி வட்டார விவசாயிகள் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ. 4,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை துறை அறிவித்துள்ளது.
ஆழ்வாா் திருநகரி வட்டார விவசாயிகள் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ. 4,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆழ்வாா்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆழ்வாா்திருநகரி வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நடப்பு காா் குறுவை சொா்ணவாரிப் பருவத்தில் அதிக மகசூல் பெறும் வகையில், தமிழக அரசின் ‘குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் 2026’ செயல்படுத்தப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, ஆழ்வாா்திருநகரி வட்டாரத்துக்கு நெல் இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்புக்காக 705 ஏக்கா் ஒதுக்கீடு பெறப்பட்டு, அதற்கு 100 சதவீத முழு மானியம் வழங்கப்படவுள்ளது. இத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதை நெல், நெல் நுண்ணூட்ட உரம், திரவ உயிா் உரம் ஆகியவை மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் ஆதாா் அட்டை, கைப்பேசி எண், வங்கி கணக்கு புத்தக நகல், விவசாய நிலத்தின் பட்டா அடங்கல் ஆகியவற்றுடன் ஜுலை 31-ஆம் தேதிக்கு முன்பாக தென்திருப்பேரை வேளாண் விரிவாக்க மையத்திலோ அல்லது தாங்களே உழவா் செயலியிலோ விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தென்திருப்பேரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.