முகப்பு
தூத்துக்குடி

பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 மே 2026, 2:24 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோா் முன்னேற்றச் சங்கம், திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரி சமத்துவபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்மண்டல மாற்றுத்திறனுடையோா் முன்னேற்றச் சங்க மாநில துணைச் செயலா் போ்சில் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டு, கண் பரிசோதனை நடத்தி, ஆலோசனைகள் வழங்கினா். இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

சங்கத்தின் சாத்தான்குளம் ஒன்றியத் தலைவா் ஹொ்சோம் நவராஜ், ஒன்றியச் செயலா் ஐசக் ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.