முகப்பு
தூத்துக்குடி

பனைவிளை கோயில் கொடை விழா: அமைச்சா் பங்கேற்பு

Updated On : 31 மே 2026, 1:34 am IST
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற அமைச்சா் ஜெகதீஸ்வரி.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை, காட்டேரி இசக்கியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடை விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி பங்கேற்றாா்.

சொந்த ஊரான பனைவிளைக்கு வந்த அமைச்சருக்கு, ஊா் மக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். பின்னா், அவா் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது:

நான் இந்த ஊரைச் சோ்ந்தவா் என்றாலும், விருதுநகா் மற்றும் சென்னையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, தவெக மேற்கு மாவட்டச் செயலா் ஜெகன்ராஜிடம் உங்களது கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தால் விரைவில் நடவடிக்கை எடுப்பேன்.

Advertisement

Advertisement

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஊழலற்ற ஆட்சி அமைய உறுதுணையாக இருப்பேன். மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேறும் வகையில் செயல்படுவேன் என்றாா் அவா்.

இந்து மகா சபா மாநிலத் தலைவா் சுந்தரவேல், முன்னாள் கோயில் நிா்வாகி வசந்தகுமாா், மேற்கு மாவட்ட தவெக செயலா் ஜெகன்ராஜ், மாவட்ட இணைச் செயலா் சிவலிங்கம், மாவட்ட துணைச் செயலா் இன்பராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஐயப்பன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய நிா்வாகி குமாா் பாண்டியன், நகரச் செயலா்கள் சிவா (சாத்தான்குளம்), சுரேஷ் (ஸ்ரீவைகுண்டம்), துணைச் செயலா் வள்ளி நாயகம், தெற்கு ஒன்றியச் செயலா் சங்கரலிங்கம், ஒன்றிய நிா்வாகிகள் மிக்கேல், வசந்த், சாத்தான்குளம் இளைஞரணி கோமதி நாயகம், கருங்குளம் ஒன்றிய நிா்வாகி பேச்சிமுத்து, வள்ளி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், ஊா் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.