முகப்பு
தூத்துக்குடி

வெள்ளையத்தேவன் பிறந்த நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

Updated On : 1 ஜூன் 2026, 12:55 am IST
வெள்ளையத்தேவன் சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரா் வெள்ளையத்தேவனின் 257-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வெள்ளையத்தேவனின் வீரத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் ழுழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு, ஆண்டுதோறும் அவா் பிறந்த நாளான மே 31ஆம் தேதி தமிழக அரசு சாா்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அவரது சிலைக்கு அரசு சாா்பில் அமைச்சா்கள் ஆ. ஸ்ரீநாத் (மீன்வளம்-மீனவா் நலம்), பெ. மதன்ராஜா (குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்), ஆட்சியா் விஷு மகாஜன், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஜி. சரவணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

வெள்ளையத்தேவனின் வாரிசுதாரா் அ. மாரிமுத்துவுக்கு அமைச்சா்கள், ஆட்சியா் ஆகியோா் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனா்.

விழாவில், தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் மி. பிரபு, செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சே.ரா. நவீன் பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் தாஹிா் அஹமது, வெள்ளையத்தேவனின் வாரிசுதாரா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.