"வருமுன் காப்போம்' மருத்துவ முகாம்
மணமேல்குடி, ஆக. 26: மணமேல்குடி ஒன்றியம், அம்மாப்பட்டினத்தில் "வருமுன் காப்போம்' பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது. முகாமுக்கு, ஊராட்சித் தலைவர் ரியால் மரைக்காயர் தலைமை வகித்தார். கவிஞர் சாலிக
மணமேல்குடி, ஆக. 26: மணமேல்குடி ஒன்றியம், அம்மாப்பட்டினத்தில் "வருமுன் காப்போம்' பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமுக்கு, ஊராட்சித் தலைவர் ரியால் மரைக்காயர் தலைமை வகித்தார். கவிஞர் சாலிகு, சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை, ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் எஸ்.எம். சீனியார் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
Advertisement
Advertisement
முகாமில், கோட்டைப்பட்டினம் வட்டார மருத்துவர் உமாபதி, மருத்துவர்கள் ராமச்சந்திர பாபு, கணேசன், வசந்தி உள்ளிட்டோர் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் 60 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.