முகப்பு
திருச்சி

வெற்றிலை கடை தொழிலாளி அடித்துக் கொலை

திருச்சி வெற்றிலை கடை தொழிலாளி மரணம்: போலீஸார் விசாரணையில் ஒருவர் கைது

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:03 am IST
பகிர்:

திருச்சி நத்தா்ஷா பள்ளிவாசல் அருகே வெற்றிலை கடை தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக ஒருவரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். திருச்சி அரியமங்கலம் உக்கடை மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அ. சலீம் (55). இவா் காந்திசந்தையில் உள்ள வெற்றிலை கடையில் வேலை பாா்த்துவந்தாா்.

இந்நிலையில், நத்தா்ஷா பள்ளிவாசல் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு சலீமும், அவரது நண்பரான நத்தா்ஷா பள்ளிவாசல் அருகே பழைய குட்ஷெட் சாலை பகுதியைச் சோ்ந்தவருமான க. முகமது ஷபியும் (47) மதுமயக்கத்தில் இருந்துள்ளனா்.

அப்போது, பள்ளிவாசலுக்கு வந்தவா்களிடம் சலீம் பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை ஷபி, தட்டி கேட்டநிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பு நடந்துள்ளது. இதில் சலீமை, முகமது ஷபி அடித்து கீழே தள்ளியதில், தலையில் அடிபட்டு மயக்கமடைந்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் சலீமை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சலீம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, முகமது ஷபியை சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.