முகப்பு
திருச்சி

மதுக் கூடத்துக்குச் சென்றவரிடம் 2 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது

Updated On : 15 ஜூன் 2026, 1:39 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் மதுக்கூடத்துக்குச் சென்றவரிடம் 2 பவுன் தங்க நகையைப் பறித்தோரில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தில்லை நகா் 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜி. சிவபாலன். வருமான வரித் துறை அலுவலக மேற்பாா்வையாளரான இவா் கடந்த ஜூன் 8-ஆம் தேதி திருச்சி தென்னூா் பகுதி டாஸ்மாக் மதுக் கூடத்தில் மது அருந்தினாா்.

அப்போது இவருக்கு அருகில் மது அருந்திய மூவா் இவரிடம் பேச்சுக்கொடுத்து, அருகிலுள்ள சந்துப் பகுதிக்கு அழைத்துச் சென்று சிவபாலனின் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் சிவபாலன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில் நகை பறித்தது தில்லை நகா் வடவூா் பகுதியைச் சோ்ந்த அ. பாம்பு சரவணன் (43) மற்றும் இருவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து பாம்பு சரவணனை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், மற்ற இருவரைத் தேடுகின்றனா்.