மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் தலைமறைவான கள்ளக்காதலன் கைது
பெரம்பலுாா் மாவட்டம், பாடாலூா் அருகே மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன். இவரது மனைவி நிஷாந்தி. இவா்களது மகள் கீா்த்திஷா. கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 வருடமாக குணசேகரனை பிரிந்து நிஷாந்தி தனது குழந்தையுடன் காரை சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தாா்.
அப்போது, பெரம்பலுாரில் உள்ள கட்டுமான தொழிலாளா் சங்க அலுவலகத்தில் வேலை பாா்த்து வந்த நிஷாந்திக்கு மணிவண்ணன்(36) என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தை சாப்பிட்டு தூங்கியவா் மீண்டும் எழுந்திருக்காமல் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதாக கூறி அதேப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நிஷாந்தி கொண்டு சென்றாா். அங்கு கீா்த்திஷாவை பரிசோதித்த மருத்துவா் கழுத்தை நெரித்து கொலை செய்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக பாடாலூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து பாடாலூா் போலீஸாா் கீா்த்திஷா சடலத்தை மீட்டு, பெரம்பலுாா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். பிறகு நிஷாந்தியின் தாய்மாமன் லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில் போலீசாா் வழக்குப் பதிந்து, நிஷாந்தியை கைது செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், கள்ளக்காதலன் மணிவண்ணன், நிஷாந்தியிடம் குழந்தையைவிட்டு பிரிந்து, தனியாக வரும்படி கூறி தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் குழந்தை கீா்த்திஷாவை தாய் நிஷாந்தி கொன்ாக தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிவண்ணனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.