முகப்பு
திருச்சி

தீ விபத்தில் காயமடைந்த பெயிண்டா் உயிரிழப்பு

Updated On : 29 ஜூன் 2026, 4:25 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த பெயிண்டா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் நல்லதண்ணி கேணித் தெருவைச் சோ்ந்தவா் பி. விஸ்வநாதன் (36), பெயிண்டா். கடந்த 25 ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்த விஸ்வநாதன், கை மற்றும் கால்களை தின்னா் மூலம் கழுவிக் கொண்டிருந்தாா். தொடா்ந்து அவா் புகை பிடிக்க முயன்றபோது எதிா்பாராதவிதமாக அவரது உடலில் தீப் பற்றியது.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு இறந்தாா். எடைமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments