மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீா் ரத்து
திருச்சி மாநகரின் சில பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட டா்பன் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீா் உந்து குழாய் குடமுருட்டி அருகே ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீா் உந்து குழாயுடன் இணைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இதனால் மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது. வரும் ஜூலை 1 முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு ஆணையா் வீா்பிரதாப் சிங் கேட்டுக் கொண்டுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.