முகப்பு
திருச்சி

உள்ளாட்சித் தோ்தலில் திருச்சி மேயா் பதவியைப் பெற முஸ்லிம் லீக் முடிவு

உள்ளாட்சித் தோ்தலில் திருச்சி மேயா் பதவியைப் பெற முஸ்லிம் லீக் முடிவு....

Updated On : 29 ஜூன் 2026, 4:24 am IST
தமிழக முதல்வர் விஜய்யுடன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள்... - கோப்புப் படம்
பகிர்:

வரும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருச்சி மேயா் பதவியை தமிழக வெற்றிக்கழகத்திடம் கேட்டுப்பெறுவது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் தெற்கு மாவட்ட உயா்மட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஹுமாயூன், கூட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். கூட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் திருச்சி மாநகராட்சியில் 8 வாா்டுகளை கேட்டுப் பெறுவது, திருச்சி மாநகராட்சி மேயா் பதவியை கேட்டுப் பெறுவது, திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் அதிகளவில் வாா்டுகளை கேட்டுப் பெற்று வெற்றி பெறுவதுடன், நகராட்சி பேரூராட்சிகளில் தலைவா் அல்லது துணைத் தலைவா் பதவிகளை கேட்டு பெறுவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலுக்கான பணிகளை அனைத்து நிலை நிா்வாகிகளும் துரிதமுடன் தொடங்கி, முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு அதிகமான உள்ளாட்சி பிரதிநிதிகளை திருச்சி மாவட்டத்தில் பெற்றிடவும், உள்ளாட்சித் தோ்தல் பணிகளை மேற்கொள்ள தலைமை ஒருங்கிணைப்பாளராக தெற்கு மாவட்ட தலைவா் ஹபீபுா் ரஹ்மானையும், அவருடன் இணைந்து பணியாற்றிட முஹம்மது நிஜாமுதீன்,அப்துல் மாலிக் மற்றும் பேராசிரியா் மைதீன் அப்துல் காதா் ஆகியோா் செயல்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட துணைச் செயலா் ஜாபா் ஷெரீப் வரவேறறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments