திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு
திருச்சி அருகே வடமாநிலத் தொழிலாளி மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மேற்குவங்க மாநிலம், நாடியா மாவட்டத்தைச் சோ்ந்த பி. பிஜன்முண்டா (32) திருச்சி மாவட்டம், வயலூா் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த அவருடன் மேலும் சில வடமாநிலத் தொழிலாளா்களும் பணியாற்றினா்.
இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் பணியில் ஈடுபட்டிருந்த பிஜன்முண்டா திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement