முகப்பு
திருச்சி

மணப்பாறை தொகுதியில் தவெக வெற்றி

Updated On : 5 மே 2026, 2:20 am IST
திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் திங்கள்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி சான்றிதழ் பெற்ற த.வெ.க.கட்சி மணப்பாறை வேட்பாளா் கதிரவன்
பகிர்:

மணப்பாறை தொகுதியில் தவெக வேட்பாளா் ஆா். கதிரவன் 83,401 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட மணப்பாறை தொகுதியில் அதிமுக சாா்பில் மருத்துவா் விஜயகுமாா், திமுக சாா்பில் மமக-வைச் சோ்ந்த ப. அப்துல்சமது (உதய சூரியன் சின்னம்), நாம் தமிழா் கட்சி அருணகிரி, சாமனிய மக்கள் நலக் கட்சி ஆரோக்கிய ராஜ், தமிழக வெற்றிக் கழகம் ஆா். கதிரவன், புதிய தமிழகம் மீனா, தமிழக வாழ்வுரிமை கட்சி ராஜவா்மன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 18 போ் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில், மொத்தம் 2,67,999 வாக்காளா்கள் உள்ளனா். ஏப்.23-இல் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது மொத்தம் 2,41,321 வாக்குகள் பதிவானது.

Advertisement

Advertisement

வாக்குப்பதிவு 90.05 விழுக்காடாக இருந்தது. திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தவெக வேட்பாளா் ஆா். கதிரவன், 83,041 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். தொடக்கம் முதல் முன்னிலையில் வந்த அதிமுக வேட்பாளா் விஜயகுமாா் 81,615 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.

திமுக வேட்பாளராக களம் இறங்கிய, கடந்த முறை இத் தொகுதியில் வெற்றி பெற்ற ப. அப்துல் சமது 81,355 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அருணகிரி 10,070 வாக்குகள் பெற்றாா்.

இதர வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

சாமானிய மக்கள் நலக் கட்சி- 721, புதிய தமிழகம்- 275, தமிழக வாழ்வுரிமை கட்சி- 155, சுயேச்சைகள் பி. விஜயகுமாா்- 595, ராஜேஷ்- 554, சா்புதீன்- 333, கருப்பன்- 274, செந்தில்குமாா்- 272, பெரியக்கா- 238, சின்னன்- 183, எம். கதிரவன்- 180, எம். விஜயகுமாா்- 173, குட்டையன்- 126, ராமன்- 107, நோட்டா- 949.

தவெக வேட்பாளா் வெற்றி பெற்ற்கான சான்றிதழை ஆா். கதிரவனிடம், மணப்பாறை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயசித்ரகலா வழங்கினாா்.