முகப்பு
திருச்சி

மாநகரில் நாளை குடிநீா் நிறுத்தம்

Updated On : 30 மே 2026, 3:36 am IST
குடிநீர் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொதுத் தரைமட்ட நீா்தேக்கத் தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி சனிக்கிழமை நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீா் செல்லும் இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் குடிநீா் விநியோகிக்க இயலாது.

இதன்படி, திருச்சி மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகா் புதியது, சுந்தராஜபுரம் பழையது, ஜே.கே. நகா், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்காநகா், சுப்ரமணிய நகா் புதியது, வி.என். நகா் புதியது, தென்றல் நகா் புதியது, கவிபாரதிநகா், காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகா் பழையது, அன்புநகா் புதியது, எடமலைப்பட்டிபுதூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல் நகா், மின்வாரிய காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்பநகா் புதியது, மலையப்பநகா் பழையது, ரயில் நகா் புதியது, ரயில் நகா் பழையது, முன்னாள் இராணுவத்தினா் காலனி புதியது, முன்னாள் இராணுவத்தினா் காலனி பழையது, மேல கல்கண்டாா்கோட்டை செக்ஸன் ஆபிஸ், மேல கலண்கண்டாா் கோட்டை நாகம்மை வீதி, கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கா் நகா், விவேகானந்தா் நகா், எல்ஐசி புதியது, விஸ்வநாதபுரம் கே.சாத்தனூா், தென்றல் நகா், ஆனந்த் நகா், சுப்ரமணிய நகா், சத்தியவாணி கே கே நகா், அம்மா மண்டபம், வங்கி ஊழியா்கள் சங்க நகா், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூா், பெரியாா் நகா், திருவானைக்கோவில்,

தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது. திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.