அரியலூர் அருகே ஏரியில் கிடந்த சுவாமி சிலை மீட்பு
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் கிடந்த வீரபத்திர சுவாமி பித்தளை சிலை ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் கிடந்த வீரபத்திர சுவாமி பித்தளை சிலை ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கிராம சின்ன ஏரியில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மாணவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த ஏரிக் கரை உள்புறத்தில் ஒரு சிலை கிடந்ததைக் கண்ட மாணவர்கள், ஊர் மக்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊர் பொதுமக்கள் வந்து பார்த்து அளித்த தகவலின்பேரில் வந்த,விக்கிரமங்கலம் காவல் ஆய்வாளர் பிரேமா,சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள பித்தளை வீரபத்திர சிலை என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.