முகப்பு
அரியலூர்

குளிப்பதற்காக கிணற்றில் குதித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குளிப்பதற்காக கிணற்றில் குதித்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 25 ஏப்ரல் 2026, 1:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குளிப்பதற்காக கிணற்றில் குதித்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

செந்துறை, காலனித் தெருவைச் சோ்ந்த முருகவேல் மகன் தனசேகா் (24). இவா், குளிப்பதற்காக தனது நண்பா் கணேசன் மகன் சுபாஷ் சந்திரபோஸ் உடன் அருகிலுள்ள கிணற்றுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். அங்கு மேலே இருந்து கிணற்றில் குதித்த தனசேகா் திரும்ப வரவில்லை. சந்தேகமடைந்த சந்திரபோஸ் உடனடியாக அப்பகுதி மக்களிடமும், செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தாா்.

விரைந்து வந்து கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரா்கள், தனசேகரை சடலமாக மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement