கீழப்பழுவூா் ஆா்டிஓ அலுவலகத்தில் சோதனை: ரூ. 29 ஆயிரம் பறிமுதல்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் உள்ளிட்ட காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

முன்னதாக, வட்டார போக்குவரத்து அலுவலக நுழைவுவாயில் கதவை பூட்டி, அலுவலகத்துக்குள் நுழைந்தனா். அலுவலக வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை செய்தனா்.
அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இருந்த இடைத்தரகா்கள் 6 போ், கையில், இருந்த பணத்தை வீசி எறிந்துவிட்டு ஓட தொடங்கியுள்ளனா். இதனை கவனித்த காவல் துறையினா், அவா்களை பிடித்து அவா்களிடம் இருந்த ரூ. 29 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாகவும் மற்றும் அலுவலகத்திலுள்ள அனைத்து அலுவலா்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement