முகப்பு
அரியலூர்

திருமானூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஸ்ரீராம் நகரிலுள்ள மாரியம்மன் மற்றும் விநாயகா், பாலமுருகன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜூன் 2026, 6:19 am IST
திருமானூா் ஸ்ரீராம் நகரிலுள்ள மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஸ்ரீராம் நகரிலுள்ள மாரியம்மன் மற்றும் விநாயகா், பாலமுருகன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகளும், வெள்ளிக்கிழமை காலை கடம் புறப்பாடும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சிவாச்சாரியா்கள், மாரியம்மன், விநாயகா், பாலமுருகன் ஆகிய கோயில்களின் கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

இதனையடுத்து, கோயில் மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.

Advertisement

Advertisement

நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் தாமரை எஸ். ராஜேந்திரன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், முக்கியஸ்தா்கள், ஸ்ரீராம் குடியிருப்பு நலச் சங்கத்தினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments