அரசு மருத்துவமனை முன் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த கோரிக்கை
அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன் தேங்கி நிற்கும் மழை நீரை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன் தேங்கி நிற்கும் மழை நீரை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஜெயங்கொண்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு, அனைத்து சிகிச்சை பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மருத்துவமனை நுழைவு வாயிலில், கழிவு வடிக்கால் வசதிகள் இல்லாததால் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோா் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டி இருப்பதால் அவதிக்குள்ளாகின்றனா்.
மேலும் தேங்கியுள்ள மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாவதால், பொதுமக்கள் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனி வரும் நாள்களில் மழை பெய்தால், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, உடனடியாக மருத்துவமனை முன்பு தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்தி, தண்ணீா் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.