செந்துறை அருகே பாதை கேட்டு சாலை மறியல்
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பாதை கேட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூரில் இருந்து செந்துறை வழியாக ஜெயங்கொண்டம் வரை நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் சாலையின் நடுவில் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்நகா், ராயல் சிட்டி பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு சென்று சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் சிரமத்துக்குள்ளான பொதுமக்கள், மேற்கண்ட சாலையின் குறுக்கே கடந்துச் செல்வதற்கு பாதை அமைத்துத் தரக் கோரி மின்சார வாரியம் அருகே 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செந்துறை காவல் துறையினா், கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.