பால்பண்ணை உதவியாளர் பயிற்சி
கரூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் ஒரு மாத கால பால்பண்ணை உதவியாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் இந்த மையத் தலைவர் ந. அகிலா.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் ஒரு மாத கால பால்பண்ணை உதவியாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் இந்த மையத் தலைவர் ந. அகிலா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒரு மாத கால பயிற்சியில் அறிவியில் ரீதியான கறவைமாடு வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுவதுடன் கறவை மாடுகளைத் தேர்வு செய்யும் முறை, வயதைக் கண்டறிதல், கால்நடைகளுக்கு அடையாளம் இடும் முறை, மாடுகளின் எடையைக் கணித்தல், கொட்டகை பராமரிப்பு முறை, தீவன மேலாண்மை, பால் கறக்கும் முறை, மடி வீக்க நோய் சோதனை, கன்று பராமரிப்பு, சினை மாடுகள் பராமரிப்பு, தொற்று நோய் தடுப்பு முறை, மாட்டுப்பண்ணையின் வரவு - செலவு கணக்குத் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்துப் பயிற்சியளிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கறவை மாட்டுப் பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு களப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி பெறுவதன் மூலம் வர்த்தக ரீதியான கறவை மாட்டுப்பண்ணைகளில் வேலைபெறும் வாய்ப்புள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ. 1,000 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 04324 - 294335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.