முகப்பு
கரூர்

4,103 பேருக்கு தாலிக்குத் தங்கம்,திருமண நிதியுதவி

கரூர் மாவட்டத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் 4,103 பயனாளிகளுக்கு ரூ. 18.5 கோடி மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்றார் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி.

Updated On : 12 மே 2013, 6:19 am IST
பகிர்:

கரூர் மாவட்டத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் 4,103 பயனாளிகளுக்கு ரூ. 18.5 கோடி மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்றார் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி.

கரூரில் சமூக நலத் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 278 பேருக்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவிகளை வழங்கி அவர் மேலும் பேசியது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும், உரிய காலத்தில் மக்களுக்குச் சென்றடையும் வகையில் நலத் திட்டங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

Advertisement

Advertisement

கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி, மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான அனைத்தும் இலவசம், படித்தவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அளித்தது என எண்ணற்றத் திட்டங்களை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.

மின்திட்டங்களுக்காக ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டங்களை வகுத்துள்ளார். மேலும், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க அண்டை மாநிலங்களில் மின்சாரத்தை விலை கொடுத்து வாங்க முதல்வர் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர மின் பாதைகளை மத்திய அரசு அமைத்துத் தர வேண்டும். ஆனால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தில் மின் பாதைகளை அமைத்துத் தர மறுக்கிறது. மேலும், தமிழகத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை 50 சதவீதம் குறைத்துள்ளது.

மத்திய அரசின் வஞ்சிக்கும் போக்கிலிருந்து தமிழகத்ததை மீட்க முதல்வர் ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராக வேண்டும். இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாப்பா ஏ. சுந்தரம், செ. காமராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் கீதா மணிவண்ணன், கரூர் நகராட்சி துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் திருவிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.