மின்கம்பி உரசியதில் லாரியில் திடீர் தீ
க. பரமத்தி அருகே ரேஷன் கடை காலி சாக்குகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
க. பரமத்தி அருகே ரேஷன் கடை காலி சாக்குகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து லாரியை மீட்டனர்.
கரூர் மாவட்டம் க. பரமத்தி கடைவீதியில் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு காலியாக உள்ள சாக்குகளை சேலத்தைச் சேர்ந்த திருஞானம் (40) என்பவர் லாரியில் ஏற்றிக்கொண்டு, க. பரமத்தி கடைவீதியில் வந்தபோது மின்கம்பி உரசியதில் சாக்கில் திடீரென தீப்பற்றியது.
இதைக் கண்ட அப்பகுதியினர் லாரி ஓட்டுநருக்கு உடனே தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து லாரியை நிறுத்திய ஓட்டுநர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புகழூர் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால், லாரி தீக்கிரையாவது தடுக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.