அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு
அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்காக நடத்தப்படும் துறை ரீதியான தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர்
அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்காக நடத்தப்படும் துறை ரீதியான தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் எ.வி. பாலுசாமி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 22-ம் தேதி தொடங்கி வரும் 30-ம்தேதி வரை நடைபெற உள்ள தேர்வை ஆய்வு செய்து, தேர்வு எழுதுபவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், போக்குவரத்து வசதிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணைய உறுப்பினர் எ.வி.பாலுசாமி விரிவாக கேட்டறிந்தார். மேலும், தேர்வு எழுதும் நபர்களிடம் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் தேர்வு எழுதுபவர்களுக்கு உள்ள சிரமங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
பசுபதீஸ்வரா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 2 அறைகள் தேர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வெழுத மொத்தம் 1,138 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, வட்டாட்சியர்கள் ஈஸ்வரன், அம்பாயிரநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.