முகப்பு
கரூர்

எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கரூரிலுள்ள அவரது சிலை

Updated On : 25 டிசம்பர் 2018, 9:32 am IST
பகிர்:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கரூரிலுள்ள அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு அதிமுகவினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பேருந்துநிலைய ரவுண்டானா அருகே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்துக்கு  மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதாமணிவண்ணன் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகரச் செயலர் வை.நெடுஞ்செழியன், மாவட்டத் துணைச் செயலர் பசுவைசிவசாமி, பொருளாளர் கண்ணதாசன், நகரக் கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, ஒன்றியச் செயலர்கள் பி.மார்கண்டேயன், கமலக்கண்ணன், இளைஞரணிச் செயலர்வி.சி.கே.ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.
 எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் எம்.செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவண்ணன், முன்னாள் மாணவரணிச் செயலர் தானேஷ், பேரவைச் செயலாளர் காமராஜ், நகர பேரவைச் செயலர் செல்வராஜ்,  நகர இளைஞரணிச் செயலர் சேரன்பழனிசாமி, துணைச் செயலர் பழனிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கரூர் வெங்கமேட்டில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments