மாணவர் மூழ்கிய இடத்தில் ஆட்சியர் ஆய்வு
கரூர் அமராவதி ஆற்றில் பிளஸ்-2 மாணவர் மூழ்கிய இடத்தில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் ஆய்வு செய்தார்.
கரூர் அமராவதி ஆற்றில் பிளஸ்-2 மாணவர் மூழ்கிய இடத்தில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் ஆய்வு செய்தார்.
கரூர் செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் ஹரி (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அமராவதியாற்றில் தற்போது தண்ணீர் வருவதால் இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை செட்டிப்பாளையம் அணைக்கட்டு கீழ் பகுதியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கினார்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் கரூர் தீயணைப்பு படையினரையும் வரவழைத்து மாணவரைத் தேடும் பணியில் ஈடுபடச் செய்தார். இதுதொடர்பாக ஆட்சியர் த. அன்பழகன் கூறுகையில், தற்போது ஆற்றில் அதிகளவு தண்ணீர் வருவதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தண்ணீரில் குளிக்கவோ, விளையாடவோ அனுமதிக்க வேண்டாம்.
மேலும் விடுமுறை தினங்களில் மக்கள் குளிக்கும் இடங்களை காவல் துறையினர் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது மாவட்டவருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.