சூதாடிய 3 பேர் கைது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
அரவக்குறிச்சி அருகே உள்ள மூலயாண்டிபட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சோதனையில் ஈடுபட்டபோது, அதேபகுதியைச் சேர்ந்த நல்லசாமி(48), தண்டபாணி(52), சேகர்(66) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.820-ஐ பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.